வாழ்வை புதுப்பிக்கும்
இனிய பயணங்கள் !
அன்புத்தமிழ் சொந்தங்களுக்கு இனிய வணக்கம் !
நாகரீகங்கள் வளர ஆரம்பித்த போது
மனிதன் ஓரிடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு பயணிக்க பழகியிருந்தான் !
பயணங்களில் புதிய விசயங்கள் புரிந்தன.கற்றுக்கொண்டான்..
வாழ்வின் உன்னதமான தருணங்களில் மிக இனிமையானவை எவை என்று தேடிப்பார்த்தால் அது நாம் பயணித்த சுற்றுலா சென்ற நாட்களாக இருக்கும்! பயணங்கள் உண்மையாகவே நமது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை தருகின்றன !
சிறு வயதில் நாம் பள்ளிக்கூடங்களில் சுற்றுலா போயிருப்போம்! அதை வயதின் பின்னால் எவ்வளவு நாட்களுக்குப்பின்னும் சிலாகித்து சொல்லி சொல்லி ரசிச்சு பார்ப்போம் !
புதிய ஊர் புதிய மக்கள் புதிய பழக்கங்கள் என ஒரு மாற்றத்தையே நமக்குள் அவை ஏற்படுத்தி விடுகின்றன !!
கவலையா இருந்தா சொந்த ஊருக்கு போயிட்டு வா சரியாயிடும் !
கொஞ்ச நாள் வெளியூர் போயிட்டு வா ..
லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போகும் குழந்தைகள் முதல்
இண்டர்வீயூவுக்கு வெளியூர் போவது வரை பயணம் என்றாலே சந்தோஷம் தான்! அதுலயும் பஸ்ல ஜன்னல் சீட் கிடைச்சா
ஒரே குஷிதான்..
வெளியூருக்கு போயிட்டு வந்து அந்த ஊர்ல என்ன ஸ்பெஷலோ அத வீட்டுக்கு வாங்கிட்டு வந்து எல்லோருக்கும் தனித்தனியா பிரிச்சு தர்ற சந்தோஷமே அலாதிதான் !
( சாப்ட்டு பாத்திட்டு இருந்தாலும் நம்ம ஊரு டேஸ்டே வராதுன்னு சொல்றது )
அன்னைக்கி பட்டணம் போறதே
பாரின் போற மாதிரிதான் !
இப்போது இந்த நிமிடம் இதை வாசிக்கிற நண்பர்கள் நீங்கள் சிறு வயதில் சுற்றுலா சென்ற ஞாபகங்களை அசை போட்டிருப்பீர்கள் !
உண்மைதான் இந்த உலகில் இறைவனின் படைப்பில் இயற்கையாய் அபரிமிதமான வளங்கள் இருக்கிறது !
கட்டுசோறு கட்டிக்கொண்டு தொலைதூரங்களை கடந்து பயணம் செய்த காலம் தொட்டு
இன்று கனநேரத்தில் உலகின் மற்றொரு பகுதிக்கு பயணப்பட வாய்ப்பிருக்கிறது !நமக்கு அருகாமையிலேயே பார்க்காத பல பெருமைமிகு ஊர்கள் உண்டு !
நேரமிருந்தா அதையெல்லாம் முதல்ல பார்த்திடுங்க !
வேலை வேலை என்று ஓடிக்கொண்டிராமல் இளைப்பாறல்
மனிதனுக்கு அவசியம் !
சக மனிதர்களிடம் குடும்பத்தினரிடம் சொந்தங்களிடம் நண்பர்களிடம் உரையாட அவர்களோடு பயணித்து
மனதை புத்துணர்ச்சியாக வைக்கப்பழகுங்கள் !
கணினி திரையும் மொபைல் போன் திரையும் விட்டு
நிஜ உலகின் வளங்களை ரசிப்போம் !
தூரமோ அருகாமையோ
பயணியுங்கள் !
பயணங்கள் நம்மை நம்பிக்கையூட்டும்! புத்துணர்ச்சியூட்டும் !
புதிய சிந்தனைகளை உருவாக்கும்!
உங்கள் பயணம் தந்த பசுமையான நினைவுகளை கருத்துக்களை பின்னூட்டங்களை பதிவிடுங்கள் !
தொடர்ந்து எழுதுகிறேன் அடுத்த பதிவில்..நன்றி !